தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - வாணக்காடு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்காக கூரை தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் குறித்த தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி வாகணக்காடு பகுதில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக புதிய வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest Offers

loading...