அநுராதபுரத்தில் பாடசாலை அதிபர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

அநுராதபுரம், ஹொரவ்பொத்தான பகுதியில் அதிபர் ஒருவரை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹொரவ்பொத்தான, றுவன் வெலி மத்திய மஹா வித்தியாலயத்தின் அதிபர் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அநுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிபர் பாடசாலையில் தரம் 6இல் புதிதாக சேர்த்துக் கொள்வதற்காக மாணவர் ஒருவரின் பெற்றோரிடம் 5000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிற்கு பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவனை இன்று பாடசாலையில் சேர்ப்பதற்காக 5000 ரூபாய் கொடுத்த வேளை அப்பணத்தை மேசை லாச்சிக்குள் அதிபர் வைத்துள்ளார்.

இதன் போது, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினர் அதிபரை கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers

loading...