காதலியின் அந்தரங்க படங்களுடன் காதலன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

காதலியின் நிர்வாணப் படங்களை தனது செல்போனில் சேமித்து வைத்திருந்த 22 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறை, கொட்டவில பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மிரிஸ்ஸ பண்டாரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த இந்த இளைஞன் விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளில் தனது செல்போனில் இருக்கும் புகைப்படங்கள் தனது காதலியின் புகைப்படங்கள் என்பதை இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த இளைஞன் சுற்றுலா வழிகாட்டியாக தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இளைஞனை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கொட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...