பொதுசன நூலகத்தை மீட்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Arivakam in சமூகம்

கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பன தொடர்ச்சியாக இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் எதிர்வரும் (04.02.2019) திங்கட்கிழமை காலை 9.00 அளவில், ஏ9 வீதியில் அமைந்துள்ள பொது நூலக காணியின் முன்பாக நடைபெறவுள்ளது.

இதற்கான முடிவு கரைச்சி பிரதேச சபையின் கொள்கை அமுலாக்கல் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பொது நூலகத்தை நேசிக்கின்ற புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் இந்த கிளிநொச்சி மாவட்டத்திற்குச் சொந்தமான நூலக மற்றும் மைதான காணிகளை ஒன்றினைந்து மீட்டெடுக்க அழைப்பதாக போராட்ட ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...