கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று கிழக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு அதற்கான தீர்வு திட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலைகளை உடனடியாக தரமுயர்த்துவற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பின்தங்கிய பாடசாலைகளுக்குரிய சகல உதவிகளையும் வழங்குவதாக கிழக்கு ஆளுநர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...