தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் மரணம்! தவிக்கும் கேப்பாபுலவு மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - கேப்பாபுலவில் 692 நாட்களாக தொடர் போராட்டதில் ஈடுப்பட்டிருந்த சிங்கள அக்கா என்று அழைக்கப்படும் இராமசாமி பிஞ்சம்மா (வயது 61) உயிரிழந்துள்ளார்.

சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்டிருந்த குறித்த வயோதிபத் தாய் கடந்த 22ஆம் திகதி வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாபுலவில் தமது சொந்த பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி இன்று 701ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த அனுதாபத்தினை வெளியிட்டுள்ளனர்.

வீதி விபத்தில் உயிரிழந்த குறித்த தாய் தனது ஒரு ஏக்கர் நிலத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 692 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers