மன்னாரில் உதவிக்கரம் அமைப்பின் 20ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் உதவிக்கரம் கறிற்றாஸ் வாழ்வுதயம் அமைப்பின் 20 ஆண்டுகள் நிறைவையொட்டி விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

மன்னார் உதவிக்கர நிலையத்தில் இன்று காலை கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இவ் அமைப்பானது உபாதை, பிறவி குறைபாடு மற்றும் விபத்தினால் அங்கங்களையும், உள் உறுப்புக்களையும் இழந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் மாற்று அங்கங்களை வழங்கி மாற்று ஆற்றல் உடையவர்களுக்கான மீள் வாழ்க்கை வழங்கும் நிறுவனமாக செயற்படுகின்றது.

குறித்த அமைப்பின் 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 20 வருடங்களாக உதவிக்கரம் அமைப்பினால் பயனடைந்த பயனாளர்களை ஒன்று திரட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளர்களுக்கான சக்கர நாற்காலியும் மாற்று நிலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...