கொட்டக்கலை பகுதியில் காட்டு தீ: பல ஏக்கர் காட்டு பகுதி நாசம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - கொட்டகலை நீரேந்தும் பகுதியில் இனம் தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் 10 ஏக்கர் வரையான காட்டு பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ளை, பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் ஹட்டன் தீயனைப்பு பிரிவினர், டிக்கோயா நகரசபையின் தலைவர் ஆகியோர் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Latest Offers

loading...