கொழும்பில் இருந்து சென்ற வான் விபத்து

Report Print Navoj in சமூகம்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரேயிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை சந்திவெளி ஏற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகிய போதும், உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லை என தெரியவருகிறது.

விபத்திற்கு இலக்கான வான் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்தினால் மின்சார கம்பிகள் அறுந்து சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest Offers