அதி சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு

Report Print Sumi in சமூகம்

கடந்த வருடம் வெளியாகிய உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றை பெற்ற 30 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விழா யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில், இன்று பலாலி பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும், உயர்கல்விக்கான நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்புத் தொகையான 5000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விழிப்புலனற்ற வாழ்வகத்தை சேர்ந்த இரு மாணவர்களுக்கு உயர் கல்விக்காக எதிர்வரும் 3 வருடங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா தொகையும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...