ஐரோப்பா மோகம் காட்டி பல ஆண்களை ஏமாற்றிய பெண்! 8 திருமணம் செய்தமை அம்பலம்

Report Print Vethu Vethu in சமூகம்

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கடுனேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொடுவ மாவதகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணின் கணவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் சிலர் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேகநபரான பெண் இளைஞர்களிடம் இருந்து 17 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் சந்தேகநபரான பெண்ணுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் வௌிநாடு செல்ல தயாராவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் படி இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான பெயரில் தன்னை அடையாளப்படுத்தியிருந்த குறித்த பெண் அந்த பெயரில் போலியான அடையாள அட்டை , பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை தயாரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , இத்தாலி செல்வதற்காக போலியான விசாவையும் சந்தேகநபரான பெண் தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest Offers

loading...