புற்று நோயை ஏற்படுத்தும் குழந்தைகளுக்கான பவுடரை இறக்குமதி செய்ய தடை

Report Print Steephen Steephen in சமூகம்

புற்று நோயை ஏற்படுத்தும் எஸ்பெக்ஸ்டோஸ் இரசாயனம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள, குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடர் வகை ஒன்றை இறக்குமதி செய்ய தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரபல வர்த்தக பெயர் கொண்ட குழந்தைகளுக்கான இந்த பவுடர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது சந்தையில் இருக்கும் தொகையை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இறக்குமதி செய்ய தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தும் எஸ்பெஸ்டோஸ் தமது உற்பத்தியில் இல்லை என சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதிப்படுத்தும் வரை இந்த தடை நீடிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உற்பத்திகளில் எஸ்பெஸ்டோஸ் இல்ரல என ஏற்றுக்கொள்ளக் கூடிய இரசாயன அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர், பதிவு மீண்டும் புதிக்கப்பட்டு, விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை சேிய மருத்துவ கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...