அனுமதிப்பத்திரமின்றி மரங்களை வெட்டிய நபர் விளக்கமறியலில்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் சோமாவதி காட்டு பகுதியில் அத்துமிறி அனுமதிப்பத்திரமின்றி பச்சை மரங்களை வெட்டிய நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சூரியபுர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் சோமாவதி காட்டுப் பகுதியில் பச்சை மரங்களை வெட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விலக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers