வவுனியாவில் வியாபார நிலையத்திற்குள் திருடிய இருவர் மடக்கிப் பிடிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து திருடிய இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள பழ மற்றும் மரக்கறி விற்பனை நிலைய உரிமையாளர் தனது கடையை திறந்து விட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்த வேளை, குறித்த பழ மற்றும் மரக்கறி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த இருவர் அங்கிருந்த காசுப் பெட்டியை திறந்து பணத்தை திருடியுள்ளனர்.

இதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்ததும் குறித்த திருட்டில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

அங்கு ஒன்று கூடிய குறித்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். வவுனியா பொலிசாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தொலைபேசி மூலம் வழங்கங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தெந்த பொலிசார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் நீர்கொழும்பு மற்றும் வவுனியா கொக்குவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் இருந்து கூரிய கத்தி மற்றும் கடவுச் சீட்டு உள்ளிட்டவையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடை உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.