வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளுடன் சிக்கிய சார்ஜென்ட்

Report Print Manju in சமூகம்

வெலிக்கடை சிறையில் ஹெரோயின் எடுத்துச் செல்ல முயன்ற சிறைச்சாலை சார்ஜென்ட் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி துசித உடவரவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சிறைச்சாலை சார்ஜென்ட்டிடம் இருந்த 20 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹெரோயினை வெலிக்கடை எச் வார்ட்டில் உள்ள கைதிகளுக்கு வழங்க கொண்டு சென்றதாக விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது.

ஹெரோயினை தனது பெல்ட்டில் மறைத்து கொண்டு செல்ல சந்தேக நபர் முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோமகம பிரதேசத்தில் உள்ள கைதி ஒருவரின் உறவினரால் இந்த ஹெரோயின் வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலை சார்ஜென்ட் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அவ்வப்போது மிகவும் சூட்சும்மான முறையில் சந்தேகத்திற்கு இடமின்றி போதைப்பொருள் எடுத்துச்சென்றுள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

Latest Offers