சீகிரியாவுக்கு செல்வோருக்கு நாளை முதல் புதிய நடைமுறை

Report Print Manju in சமூகம்

சீகிரிய அகழி உள்ளிட்ட பகுதியை நாளை முதல் பொலித்தீன் உட்பட கழிவுகள் அற்ற பிரதேசமாக பெயரிட மத்திய கலாச்சார நிதியம் முடிவு செய்துள்ளது.

வீடமைப்பு, கட்டுமான மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் அறிவுரைப்படி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா செயற்திட்ட முகாமையாளர் மேஜர் எம்.எம். நிஷாந்த் தெரிவித்துள்ளார்.

சீகிரிய அகழியை அண்டியுள்ள பகுதியில் சமைத்த உணவுகள், தின்பண்டங்கள் கொண்டு செல்ல உள்ளூர் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிஸ்கட் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன் பிஸ்கட் பக்கெட்டில் உள்ள பொலித்தீனை அகற்றி விட்டு அவற்றைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் தண்ணீர் போத்தல் மூடிகளில் உள்ள பொலித்தீன் கவர், லேபிள் மற்றும் போத்தலைச் சுற்றியுள்ள பொலித்தீன் கவர் அகற்றபட்டு, தண்ணீர் போத்தல்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...