அர்ஜூன் அலோசியஸ் நீதிமன்றில் விடுத்த முக்கிய கோரிக்கை!

Report Print Kamel Kamel in சமூகம்

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் நீதிமன்றில் கோரியுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றினால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு கோரி அர்ஜூன் அலோசியஸ் இந்த மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தமது கட்சிக்காரர், இரண்டு மாதங்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்குமாறு அலோசியஸின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதவான் லங்கா ஜயரட்ன, குற்ற விசாரணைப் பிரிவினரின் கருத்தை அறிந்து கொண்டு கோரிக்கை குறித்து பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அர்ஜூன் அலோசியஸ் கடந்த 1ஆம் திகதியே பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...