கொழும்பு வைத்தியசாலையில் ஏற்பட்ட சோகம் - குழந்தையுடன் உயிரிழந்த இளம் தாய்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குழந்தையை பிரசவிக்கும் போது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாரவில மற்றும் மஹவெவ மக்கள் வங்கி கிளைகளில் பணியாற்றும் வங்கி அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதுகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 6 மாத கர்ப்பிணி பெண்ணான குறித்த அதிகாரி, குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.

32 வயதான தனுஜா ஹர்ஷனி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் வத்தளை பிரதேசத்திலுள்ள மகப்பேறு மற்றும் தாய்மார்களுக்காக விசேட வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி அவருக்கு அதிக இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் ஏற்படும் பிரச்சினை அதிகமாக ஏற்பட்டமையினால் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வைத்தியர்கள் முயற்சித்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.