மரை இறைச்சியுடன் வயோதிபர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மயிலவெவ பகுதியில் மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வயோதிபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த 50 வயது உடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரையை வேட்டையாடி அதன் இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோதே ஏழு கிலோகிராம் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் மரையொன்று காட்டுப் பகுதியில் விழுந்து கிடந்ததாகவும், அதில் ஒரு பகுதியை இறைச்சிக்காக வெட்டி கொண்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers