யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர்! தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் பின்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன் நாவாந்துறை பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த போது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் காப்பாற்றியிருந்தனர்.

பின்னர் அந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றுவிட்டதாக பொலிஸார் கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை பொலிஸ் வட்டாரங்கள் வழங்கிய தகவலின் படி, யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சந்தேகநபர் தற்போது 24ஆம் விடுதியில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.