கொழும்பு நோக்கி முச்சக்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்துள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்றுத்திறனாளி இளைஞரொருவர் முச்சக்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த பயணம் இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டியும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மௌஹமட் அலி என்ற குறித்த இளைஞர் தமிழ் மாற்று திறனாளி அமைப்பின் ஒழுங்கமைப்பில் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு நோக்கி செல்லும் மௌஹமட் அலி கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கு சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளார்.