யாழ். நாவாந்துறை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடர்பில் நீதியைவேண்டி நாவாந்துறை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்தநபர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபர் எங்கே? என கேட்டும், பொலிஸார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என கேட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது “எம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன..?”, “சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகம் தமிழ் இனத்துக்கு மட்டுமா..?” என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.