இலங்கையில் செயற்பட்ட சீனாவின் நிறுவனத்திற்கு இடைக்கால தடை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் தனியார் சட்டநிறுவனமாக செயற்பட்ட சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாக்குயன் லோ குருப் லங்கா லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீதே இந்த தடையுத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி நயன விஜயசூரியவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த நிறுவனம் இலங்கையில் சட்டநிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளமையானது, உள்ளூர் சட்டநிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் கம்பனி பதிவாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு எதிர்வரும் ஒக்டோபரில் இருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.