கனேடிய பாராளுமன்றில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா

Report Print Dias Dias in சமூகம்

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா தை 27, 2019 ஒட்டாவா பாராளுமன்றில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன் போது 250 க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பழந்தமிழர் பாரம்பரியத்தை பேணும் வண்ணம் நடன நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கனேடிய பூர்விக மண்ணின் ஆசீர்வாதம், கனேடியத் தேசிய கீதம் மற்றும் தமிழ்மொழி வாழ்த்து மற்றும் இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கும் கனடாவின் சார்பாக போர்க்களங்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

Nepean பிராந்தியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் Anitha Vandenbeld நடன பாராளுமன்ற உறுப்பினர் Chandra Arya உடன் இணைந்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் செய்தி மற்றும் ஒட்டாவா தமிழ் பாரம்பரிய மாத விருந்துபசாரத்துக்கு வாழ்த்துக்களையும் வாசித்துள்ளார்.

ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் தமிழ் மரபுத்திங்கள் வரைபை ஒன்றாரியோ மாகாணத்தில் முழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Todd Smitth அவர்கள் ஒன்றாரியோ ஆளும் கட்சியின் பாராளுமன்ற தலைவராகவும் அரச மற்றும் நுகர்வோர் சேவை அமைச்சராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோ மாகாண சமூக மற்றும் சிறுவர் துறை அமைச்சரான Hon. Lisa MacLeod கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் ஒட்டாவா Nepean பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவின் தலைநகரின் Carleton பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் Richard Mann தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு பின்னரும் மீண்டெழுகின்ற பண்பு பற்றி சிறப்புரை ஆற்றியுள்ளார்.

தமிழர் தாயகமும் இலங்கை தீவில் தமிழர் இனப்படுகொலையும் எனும் தலைப்பிலான இரண்டாம் சர்வதேச ஆய்வு மாநாட்டின் இரண்டாம் நாள் சிறப்புரை ஆற்றி ஆய்வறிக்கை சமர்பித்தவர் என்பது குறிப்படித்தக்கது.

தமிழர்களின் தொய்மை வரலாறுகளையும் சைவ சமய தொய்மை பற்றியும்தமிழ் கடவுள் முருகன் பற்றியும் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வில் உரையாற்றி இருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில் கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பம்சமாக ரொரண்டோ மிசிசாகா மற்றும் மொன்றியல் போன்ற நகரங்களில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்றனர். Toronto, Montrea போன்ற நகரங்களில் இருந்து வந்த சிறந்த கலை நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் அமையப்பெற்றிந்தது.

இராப்போசனத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கனடா முழுவதும் தை மாதம் கொண்டாடப்படும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.

இந்த ஒட்டாவா தமிழ் பாரம்பரிய பண்டிகையானது சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பப்பட்டது.

குறித்த நிகழ்வில் கனடாவின் மாநகர, மாகாண மத்திய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பின்னவரும், தலைவர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

1. Ottawa Mayor Hon. Jim Watson

2. Ontario Provincial Minister Hon. Todd Smith

3. Ontario Provincial Minister Lisa Macleod

4. Member of Parliament Anita Vandenbeld

5. Member of Parliament Garnett Genuis

6. Member of Parliament Chandra Arya

7. Ontario Provincial Liberal interim leader MPP John Fraser

8. Member of Parliament Peter Kent

9. Member of Parliament John Brassard

10. Member of Parliament Cathay Wagantall

11. Member of Parliament Irene Mathyssen

12. Member of Parliament Bob Saroya

13. Amnesty International representative Mr John Argue