திருட்டு நகைகளை வைத்திருந்த நபர் ஒருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பவுண் திருட்டு நகைகளை வைத்திருந்த நபருக்கு இம்மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி குறித்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த நபர் 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருட்டு நகைகளை வைத்திருந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.