48 மணிநேரம் நடுக்கடலில் தத்தளித்த படகு! மீனவர்களினால் மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவப் படகு ஒன்று கொக்குளாய் பகுதி மீனவர்களினால் இன்று காலை கரைசேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரைசேர்க்கப்பட்ட படகில் இருந்து இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சிலாவத்தை - தீர்த்தக்கரை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடித் தொழிக்காக ஆழ்கடல் சென்ற மீனவ படகு ஒன்று காணமல் போயிருந்தது.

இந்த நிலையில் குறித்த மீனவ படகை தேடும் முயற்சியில் முல்லைத்தீவு மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளம் மற்றும் நீரியல் வளத்திணைக்களம், கடற்படையினர் நேற்று பிற்பகல் தொடக்கம் ஈடுபட்டிருந்தனர்.

கொக்குளாய் பகுதி மீனவர்கள் இன்று அதிகாலை ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது குறித்த படகு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை அவதானித்து கரைசேர்த்துள்ளனர்.

மேலும் படகில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக சுமார் 48 மணித்தியாளத்திற்கு அதிகமான நேரம் குறித்த படகு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்ததாக படகில் இருந்த மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.