வவுனியாவில் மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு! வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

Report Print Theesan in சமூகம்

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையின் மருந்தாளர்களும் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி, பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பினால் வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.