முச்சக்கரவண்டியுடன் காணாமல் போன கணவனின் நிலை என்ன? தவிக்கும் மனைவி

Report Print Manju in சமூகம்

குருணாகலில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த கணவனை காணவில்லை என மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

வெல்லவ- துருலியகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஜீ.உபுல் ஜயகொட ரூபசிங்க என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 29ம் திகதி அவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடவெல பிரதேசத்தில் கட்டுமாணப் பணி நடைபெறும் இடத்தில் முச்சக்கர வண்டி சாரதியாக வேலைக்கு சென்ற குறித்த நபர் 2016ம் ஆண்டு மார்ச் 29ம் திகதி முதல் எவ்வித தகவலும் இல்லை என அவரின் மனைவி எஸ்.பி.மேனகா ரோகினி ஜயலத் தெரிவித்துள்ளார்.

கணவர் காணாமல்போன நாள் முதல் அவரைத் தேடி வருவதாகவும் அவரின் முச்சக்கர வண்டியை இன்னுமொரு நபர் பாவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதில் முச்சக்கர வண்டி உரிமையாளர் தன்னிடம் அதனை விற்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் கணவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என காணாமல்போனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

கணவர் காணாமல் போன வேளையில் முச்சக்கர வண்டி கடத்தப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.