கந்தளாயில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கந்தளாயில் 250 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 6 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டார்.

கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வேறு ஒருவருக்கு வழங்குவதற்காக பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சா 250 மில்லி கிராமை வைத்துக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers