போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் இராணுவத்தினர்

Report Print Mohan Mohan in சமூகம்

கேப்பாபுலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி இன்று 702 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு இராணுவத்தினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு இராணுவத்தினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற்றுக்கொள்ளும் வசதியினை இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயல பிரிவின்கீழ் உள்ள கேப்பாபுலவு கிராமம் இராணுவத்தினரின் பூரணகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் அந்தப்பகுதி வாழ் பொதுமக்களின் பூர்வீக நிலங்களில் இருந்த நிரந்தர வீடுளை உள்ளடக்கி இராணுவத்தினர் பாரிய படைமூகாங்களை அமைத்து நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமது சொந்த நிலங்களை இராணுவத்தினர் மீள கையளிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் மீக நீண்ட நாட்களாக கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தற்பொழுது உணவுமற்றும் குடிநீர் வசதிகள் அற்ற நிலையில் தமது போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருப்பதாக கவலை தெரிவித்திருந்தனர்.