புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தினர் செய்த உதவி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தால் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளது.

வவுனியா சிவபுரம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஹரிதிக் ஹன்சுஜா மற்றும் நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த ஆர்.நிவர்சனா ஆகியோர் வன்னி மாவட்டத்தில் அதிக புள்ளிகளை புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றமையால் அவர்களுக்காக 17-ஜனவரி 2019 அன்று இராணுவத்தினரால் அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டிற்கான கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறன.

வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அமையத்தில் பணியாற்றும் சந்தனா அலஹாகூனின் நிதி உதவியுடன் இரண்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் 21வது படைப் பிரிவின் பிரிகேடியர் குமார் ஜெயபத்ரன கலந்துகொண்டதுடன் இரண்டு மாணவிகளும் கல்வியை தொடர்வதற்காக நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.