யாழில் நடந்த கோரச் சம்பவம் - ரயிலில் மோதுண்டு தூக்கியெறிப்பட்ட இளைஞன் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நேற்று ரயிலில் மோதுண்டு படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், ரயிலில் மோதி படுகாயமடைந்தார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயிலில் மோதுண்ட இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுணாவிலை பகுதியை சேர்ந்த 28 வயதான பாலமகேந்திரன் விக்னேஸ்வரன் என்ற இளைஞனே பரிதாபமான உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில் மோட்டார் சைக்கிள் ரயில் கடவையை கடக்க முற்பட்ட இளைஞனை தூக்கி எறிந்ததுடன், மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

தூக்கி வீசப்பட்ட இளைஞன் தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கிருந்து மேலதிக சிகிட்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.