திருமணத்தின் பின் குழந்தையுடன் டட்யானா - ரோஹித தம்பதி!

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் பேஸ்புக் புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் திருமண பந்தத்தில் இணைந்த ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யான நேற்று பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

ரோஹித மற்றும் டட்யான குழந்தை ஒன்றை வைத்திருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே ரோஹித பதிவிட்டுள்ளார்.

6 நாட்களின் பின்னர் என குறிப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனால் உலகில் வேகமாக குழந்தை பெற்ற தம்பதி இவர்கள் தான் என பலர் நகைச்சுவையாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் திருமணத்தில் இணைந்த தம்பதியர், பௌத்தம், தமிழ், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து அதிகம் பேசப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.