வவுனியாவில் கிராமப்புற பாடசாலைகளுக்கு முதலுதவி சிகிச்சை பெட்டிகள் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவிலுள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கு முதலுதவி சிகிச்சை பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முதலுதவி சிகிச்சை பெட்டிகள் நேற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் நடராஜசிங்கத்தின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களிலுள்ள வசதியற்ற 20 தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் இந்த முதலுதவி சிகிச்சைப் பெட்டிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.