பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி? சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம்

Report Print Kamel Kamel in சமூகம்

காண்பவர்கள் எல்லோருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

பீல்ட் மார்ஷல் பதவி என்பது கௌரவ பதவியொன்றாகும், காணும் காணும் நபர்களுக்கு இந்த பதவியை வழங்குவது பதவியை இழிவுபடுத்தும் செயற்பாடாகும்.

போர் பலம் இருக்கும் காரணத்திற்காக எந்தவொரு நபருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியும் என்றால், அனைத்து வகையிலான போர் பலங்களுடன் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பீல்ட் மார்ஷல் பதவி எனக்கு வழங்கப்பட்டதனை நான் கௌரவமாக கருதுகின்றேன். இந்த பதவியை மலினப்படுத்தும் வகையில் அண்மையில் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

வேறும் நபர்களுக்கும் இந்தப் பதவியை வழங்க வேண்டுமென சிலர் கருத்து வெளியிட்ட போதிலும் அவ்வாறு இந்த பதவியை இழிவுபடுத்த முடியாது.

போர் பலம் உள்ள காரணத்தினால் மட்டும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியுமாயின், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அந்த பதவியை வழங்க முடியும்.

இந்தியாவில் இராணுவ தளபதி ஒருவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.