மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி

Report Print Ashik in சமூகம்

மன்னார், அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் எம்.வை.மாஹீர் தலைமையில் நேற்று மாலை இந்த விளையாட்டு போட்டி இடம்பெற்றுள்ளது.

இதன் போது மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிறட்லி, அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளர், வர்த்தக வாணிப அமைச்சின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.என்.முஜீபு ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.