தமிழர் தலைநகரில் இரோவோடு இரவாக கைது செய்யப்பட்ட நால்வர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தமிழர் தலைநகரான திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு சந்தேகநபரும் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் - வென்ராசன்புர பகுதியை சேர்ந்த ஜி.எம்.எஸ்.தில்ருக்ச பண்டார (24 வயது) என்பவரிடமிருந்து 520 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வைத்து 1011 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே இடத்தைச் சேர்ந்த எல்.பீ.அமில சம்பத் சந்ரஜீவ (36 வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்து கந்தளாய் - வென்ராசன்புர பகுதியை சேர்ந்த நபரொருவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 1372 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் அதே இடத்தை சேர்ந்த ஆர்.ஏ.சன்ஜீவ கருணாரத்ன (32 வயது) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேலும் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயதுடைய பேராறு பகுதியை சேர்ந்த இளைஞரொருவரும் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர்களை இன்றைய தினம் கந்தளாய் நீதவானின் வாசஸ்தலத்தில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers