மன்னாரில் தனியார் கல்வி நிலையத்திற்கு தீ வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம் மீது இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினர் இன்று காலை 8 மணியளவில் நிலையத்தை திறந்த போது தீப்பற்றி எரிவதை கண்ட நிலையில், உடனடியாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இன்று அதிகாலை குறித்த கல்வி நிலைய பகுதிக்கு சென்றுள்ள இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணை நிரப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்து குறித்த கல்வி நிலையத்தின் வகுப்பறை கூடம் மீது வீசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இன்போது தீ ஏற்பட்டு குறித்த வகுப்பறையின் உள்ளக பகுதிகளில் மரத்தினாலான பகுதிகள் எறிந்துள்ளது. அத்துடன் உருகிய நிலையில் இரண்டு பிளாஸ்ரிக் போத்தல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தீயை கட்டுப்படுத்திய நிலையில் அவசர பொலிஸ் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும் அவர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிராம அலுவலகர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை அவதானித்துள்ளனர்.

Latest Offers