முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 695ஆவது நாளாக தொடர்ந்து நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.