இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி சக்கர நாற்காலி பயணம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட முகமட் அலி என்ற இளைஞர் இன நல்லிணக்கத்தையும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்டவர்களின் உரிமையையும் வலியுறுத்தி சக்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த பயணம் இன்று வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் சம்பிரதாயபூர்வமாக முகமட் அலியின் இன்றைய நல்லிணக்க பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

முகமட் அலி இலங்கை மின்சாரசபையில் பணியாற்றியபோது ஏற்பட்ட விபத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.