புதையல் தோண்டியவர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய், பேராறு பிரதேசத்தில் புதையல் தோண்டியவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபர்களை நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல், மாவத்கம மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 45,47,62,28 மற்றும் 20 வயதுடைய பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பேராறு பகுதியில் பெண்ணொருவரின் வீட்டில் 13 அடி ஆழத்தில் குறித்த நபர்கள் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதன்போது சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணொருவர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

அத்தோடு சந்தேக நபர்களிடமிருந்து புதையலை கண்டறியும் இயந்திரம், அழவாங்கு, மண்வெட்டி இரும்புக் கூர்கள் மற்றும் கூடைகள் போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers