சாரதி உறங்கியமையினால் ஏற்பட்ட விபரீதம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

அனுராதபுரம் - ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஹொரவ்பொத்தான பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி வீதியை விட்டு விலகியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதிக்கு ஏற்பட்ட உறக்கமே லொறி வீதியை விட்டு விலகுவதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் லொறி சேதமடைந்துள்ளதுடன் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான மின் கம்பம் ஒன்றும் உடைந்து விழுந்துள்ளது