கிளிநொச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, டிப்போச் சந்தியில் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக கிளிநொச்சி பொலிஸ் நிலையம் வரை சென்றடைந்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களினால் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்போம், போதை அது சாவின் பாதை, வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம், போதைப் பொருளிலிருந்து எம் சமூகத்தை பாதுகாப்போம், கஞ்சாவையும் கசிப்பையும் குடித்து உன் வாழ்வை சிதைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers