கிளிநொச்சியில் விழிப்புணர்வு மரதன் ஓட்டப்போட்டி

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி சேகரிக்கும் முகமாக விழிப்புணர்வு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முகமாலையில் இன்று கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களால் இந்த ஓட்டப்போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.