இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை சுங்க பிரிவு தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பல சுங்கத்தில் சிக்கியிருப்பதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்த சங்கம் என்பன தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக குறித்த சங்கங்களின் பேச்சாளர் ஹேமக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாட்டினுள் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுங்க பிரிவினரினால் முன்னெடுக்கப்படும் தொற்சங்க நடவடிக்கை இன்றும் நான்காவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள அனைத்து பொருட்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers

loading...