பெண் ஒருவரின் கொடூர தாக்குதலில் இளைஞன் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

மொனராகலை பகுதியில் பெண்ணொருவரின் கொடூர தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

செவனகல பிரதேசத்தில் கூர்மையான ஆயுதம் ஒன்றில் பெண் ஒருவர் தாக்கியமையினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினைக்கமைய பெண் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் செவனகல எக்கமுத்துகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்த சந்தேக நபரான பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.