மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமந்திரன் விஜயம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை எம்.ஏ.சுமந்திரன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கும் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பிலும் இதன்போது விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.