49 இந்திய பிரஜைகள் கைது!

Report Print Steephen Steephen in சமூகம்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகமை பிரதேசத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று இந்த இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

அதேவேளை ஹொரணை, இங்கிரிய பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இந்திய பிரஜைகள் கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமையவே இன்று இந்த 49 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், மிரிஹான தடுப்பு முகாம் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளனர்.