இலங்கைக்குரிய உயிரினங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

அழிந்து வரும் விலங்குகள், வண்டுகள் உட்பட ஆயிரணக்கான உயிரினங்கள் மற்றும் செடிகளை சிங்கராஜ வனத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த ஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 5 பேரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள மூன்று வகையான வண்ணாத்துபூச்சிகள், தோள்கள், குளவிகள் போன்ற ஆயிரக்கணக்கான உயிரினங்களை சந்தேக நபர்கள் தம்வசம் வைத்திருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தவிர பல்வேறு விதைகள், செடிகள், உயிருடன் கூடிய இறந்து போன உயிரினங்கள் அவர்களிடம் இருந்துள்ளன.

சிங்களராஜ வனத்தில் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளின் சேகரிக்கப்பட்ட செடிகள், விலங்குகளின் பாகங்கள் சந்தேக நபர்களிடம் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொழுது போக்கிற்கான தாம் இவற்றை சேகரித்ததாக வெளிநாட்டுப் பிரஜைகள் , வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கைப்பற்றியவை, கலவான வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.