மாபெரும் போராட்டத்திற்கு சுதந்திர தினத்தன்று அழைப்பு

Report Print Arivakam in சமூகம்

வாசிப்புச்சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று மாபெரும் போராட்டத்திற்கு கரைச்சி பிரதேச சபை அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் அவசியமானதுமான, பொது நூலக காணியினையும், பொது விளையாட்டு மைதானத்தினையும் 2009ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை இராணுவத்தினரும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சும் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

நூலகத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. பொது விளையாட்டு மைதான காணியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு சர்வதேச விளையாட்டு அரங்கு ஒன்றினை நிர்மாணிக்கின்றோம் என்ற பெயரில் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் அடாத்தாக கையகப்படுத்தி எந்தவிதமான ஆக்கபூர்வமான வேலைகளும் செய்யப்படாமல் அரைகுறை கட்டடங்களாக காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட நூலக கட்டுமானங்களுக்காக பல திட்டங்கள் வந்தபோதும் காணி விடுவிப்பு சம்மந்தமான இராணுவத்தினரின் அசமந்தப்போக்கினால் அனைத்து திட்டங்களும் தடைப்பட்டு போகின்றன.

காணி விடுவிப்பு சம்மந்தமாக ஜனாதிபதி, பிரதம மந்திரி, பாதுகாப்பு அமைச்சு அனைத்தும் பெயரளவில் இணங்கியுள்ள போதும் இன்றுவரை ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக எமது மண்ணின் இளைஞர்களின் விளையாட்டுரிமையும எம் மக்களின் வாசிப்புரிமையும் மறுக்கப்பட்டிருக்கிறது. இழந்து விட்ட எமது நூலகத்தையும் மைதானத்தையும் மீட்பதற்காய் கல்வியலாளர்கள் வாசகர்கள் பொது மக்கள் விளையாட்டுக்கழகங்கள் என அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

Latest Offers